Tuesday 2 November 2021

மறைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

 மறைக்கப்பட்ட தமிழனின் வரலாறு:

258 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட விடுதலை வரலாறு...

இவர் இந்தியாவின் முதல் விடுதலை வீரராக இருந்தும் இன்னும் தமிழ்நாட்டில் கூட சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

30 வருடங்களுக்கு முன்பு வரை இப்படி ஒரு வீரர் இருந்ததை எவரும் அறியவில்லை

1996-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் ரயில் நிலையம் முன்பு முதல் விடுதலை வீரர் என்று சிலை வைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த அமைச்சர் பெருமக்களும் வந்து மரியாதை செய்ததில்லை.

இவர் வீர மரணம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த விடுதலை வீரர்கள் அனைவருக்கும் மாநில விழா நடக்கிறது.

இவருக்கு இவர் பிறந்த ஊரில் மட்டும் அரசு விழா நடக்கிறது.

இவருக்கு தபால் தலை வெளியிடபடவில்லை

2013 ,2014 ,2015 மற்றும் சில சுதந்திர தின உரையில் பெயர்கூட குறிப்பிடப்படவில்லை.

இவரை தவிர அனைத்து வீரர்களின் வரலாறும் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.

எந்த தொலைகாட்சியும் இவரை பற்றி ஒளிபரப்பியதும் இல்லை.

மறைக்கப்பட்ட வரலாறு ஆரம்பம்:

இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவில் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் ஒரு தமிழன். இந்திய விடுதலை போரின் முதல் வீரன் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் (1728-1757).

தந்தை : மன்னர் அழகு முத்து கோன் ( அழகு முத்து இவர்களின் குடும்ப பெயர் 20 தலை முறைக்கு மேல் இந்த பெயர் உள்ளது)
தாய் : ராணி அழகு முத்தம்மாள்

தந்தை அழகுமுத்துக்கோன் 1725 -ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார்.1750 -ல் அனுமந்தகுடி போரில் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு ஆதரவாக போரிட்டார். சேதுபதிக்கு வெற்றி தேடி தந்த போதிலும் இவர் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750 ல் நமது விடுதலை வீரர் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

நமது விடுதலை வீரர் உடன் பிறந்த தம்பி சின்ன அழகுமுத்துக்கோன்(1729-1755) இவர் 1755-ல் நடந்த விடுதலை போரில் தன்னுடைய 26-ம் வயதில் வீர மரணம் அடைந்தார்.இவருடைய வாரிசுகளே இன்று வாழ்கின்றனர்.

மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுப் கான்((1725 - 15.10.1764) என்பவனுக்கு (கான் ஷா கெப்) வழங்கப்பட்டது.

வரி தர மறுத்த நமது விடுதலை வீரர் மன்னர் வீர அழகு முத்து கோனுக்கும் (1728-1757) முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.வீர அழகு முத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகு முத்து கோனும் அவருடைய 6 தளபதிகள்

1. கெச்சிலணன் கோனார்
2. முத்தழகு கோனார்
3. வெங்கடேஸ்வர எட்டு கோனார்
4. ஜெகவீரரெட்டு கோனார்
5. முத்திருளன் கோனார்
6. மயிலுப்பிள்ளை கோனார்.

கைது செய்யப்பட்டு இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர். என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் .பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகு முத்து கோன் மன்னிப்பு கேடக மறுத்துவிட்டார்.பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.பீரங்கி முன் நின்ற வீர அழகு முத்து கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

மன்னர் வீர அழகுமுத்து கோன் மகன் குமார அழகுமுத்து கோன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவாக போரிட்டும் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு ஊமைத்துரை அடைக்கப்பட்ட சிறையை தன உறவினர்கள் உதவியுடன் உடைத்து ஊமைத்துரையை தப்பிக்க செய்தார்.

குமார அழகுமுத்து கோன் மகன் அழகுமுத்து செவத்தையா கோன் ஊமைத்துரையின் உயிர் காக்கும் பொருட்டு வேலினை தன் மார்பில் தாங்கி வீர மரணம் அடைந்தார்.

இப்படி ஒரு வம்சமே விடுதலைக்கு வித்திட்ட பொழுதும் அரசாங்கமும், ஊடகங்களும் இந்த மாவீரர்களின் வரலாற்றை மறைப்பது ஏன்?